ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை

ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5,000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை
Batman is back

Casualties cross 1000 in SLA's attempt to capture civilians

Hundreds of dead bodies and wounded civilians were still lying in Maaththa'lan and Pokka'nai, and more than 600 seriously wounded have been brought to a makeshift hospital - CLICK HERE
Post with links

ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்

ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்
An ordered list

மணபெண்ணே இது உங்களுக்கு...


''மூன்று மாதத்திலிருந்து, முகூர்த்தம் வரை மணப்பெண்களை எப்படி தயார் செய்து, என் னென்ன மேக்அப் செய்கிறார்கள்'' என்பதை விளக்குகிறார், நேச்சுரல்ஸ் இருபாலர் ஸ்பா அன்ட் சலூன் பிரைடல் டிசைன் ஸ்டுடி யோவின் இயக்குநர் வீணா குமாரவேல். முன்பெல்லாம் மணப்பெண் அலங்காரம் என்பது முகூர்த்தம் நடக்கும் அன்று காலை யில் மணப்பெண்ணுக்கு மேக்அப் போடுவது மட்டும்தான். இப்போது முகம் மட்டுமல்ல, உடல் முழுவதும் அழகாக்கப்படுகிறது. மட்டு மின்றி உடை, நகைகள் போன்றவை அனைத் தும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தேர்ந்தெடுத்து முழுமை படுத்தப்படுகிறது.

3 மாதங்களுக்கு முன்பு

இன்றைய சுற்றுப்புற சூழல் அதிக மாசு கலந்ததாக இருக்கிறது. பெண்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்க நிலை போன்றவைகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதிக வேலைப்பளுவால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் உள்ளாகுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக் கப்பட்டு, அழகும் கெடுகிறது. 3 மாதத்திற்கு முன்பிருந்தே அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். தினமும் 45 லீற்றர் தண்ணீர் பருகவேண்டும்.

அசைவ உணவுகளின் அள வைக்குறைத்து, பெருமளவு காய்கறி, பழங் களை உணவில் சேர்க்கவேண்டும். மனதை அமைதிப்படுத்தும் பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். தினமும் 8 மணிநேரம் நன்றாகத் தூங்கவேண்டும். உடலை நன்றாக பராமரித்து, அழகில் ஆர்வம் செலுத்தவேண்டும். அழகைப் பொறுத்தவரையில் முதலில் வீட்டிலே அதற்குரிய செயல்முறைகளைத் தொடங்க வேண்டும். ஓட்ஸ், பால் பவுடர் ஆகிய இரண்டையும் ஓரன்ஜ் ஜூசில் கலந்து வாரத்தில் ஒருநாள் உடம்பு முழுவதும் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்பான்ஞ்ச் அல்லது கை விரலால் மிதமாக தேய்த்துக்கொடுக்க வேண்டும். பின்பு கழுவிவிட வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் இருக்கும் ''இறந்த செல்கள்'' நீங்கிவிடும். பால் பவுடரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் சருமத்தில் பதிந்து பளபளப்பை கொடுக்கும்.

அழகு நிலையத்தில் மணப்பெண்களுக்காக இப்போது ''மில்க் பாத்'' உள்ளது. தொட்டியில் பால், தண்ணீர் மற்றும் ஒவ்வொருவர் சருமத்திற்கும் தேவையான ஜெல்லும் அதில் கலந்திருக்கும். முதலில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி உடலில் பூசி தேய்த்து ''ஸ்கிரப்'' செய்துவிட்டு, பின்பு ''ஆவி பாத்'' கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவர்கள் மில்க் பாத் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு உடல் முழுக்க ''மாஸ்க்'' போடப்படும். இதனால் உடல் முழுக்க உள்ள சருமம் ஒரே நிறத்தில் தோன்றும். பளபளப்பும் தோன்றும். இதனை திருமணம் நடக்கும்வரை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது.

பெண்கள் ''வையின் தெரபி''யும் எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஸ்கிரப் செய்தல் பின்பு ஆவி பிடித்தல் அடுத்து வையின் கலந்த நீரில் குளிக்கவைத்தல் போன்றவை இதன் கட்டங் களாகும். இந்த தெரபிக்கான வையின் தனித் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பால் பிடிக்காதவர்கள் வையினில் குளிக்கிறார்கள். முக அழகுக்கு வீட்டில் இருக்கும் பொருட் களை முதலில் பயன்படுத்த வேண்டும். ''நோர்மல் ஸ்கின்'' கொண்டவர்கள் ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்ய வேண்டும். பத்து நிமிடத்தில் அதை நீக்கிவிட்டு, ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

எண்ணெய்த்தன்மை சருமத்தை கொண்டவர் கள் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் முகத்தை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் எலுமிச்சம் பழச்சாறை முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் கழுவி விடவேண்டும். இது லேசான எரிச் சலைத் தரும். இதை விரும்பாதவர்கள் சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும். பின்பு வாரத்தில் ஒருமுறை மட்டும் இவ்வாறு செய்தால் போதும். எண்ணெய்த் தன்மை குறைந்ததும் இந்த வீட்டு சிகிச்சையை நிறுத்தி விடலாம். ஆனால் கருப்புப் புள்ளி, திட்டு, படை, முகப்பரு, நிறமாற்றம் போன் றவை இருப்பவர்கள் அழகு நிலையங்களிலே இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியி ருக்கும். கூந்தல் பராமரிப்பை பொறுத்தவரையில் மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒன்றை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின்பு ஷாம்பூ போட்டு கழுவி, கண்டி ஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை முடியில் மட்டும்தான் புரட்ட வேண்டும். தலை ஓட்டில் படக்கூடாது.


கூந்தல் ''டிரை ஹெயர்'' ஆக இருந்தால் தே.எண்ணெய், விளக்கெண்ணெய், கிளிசரின், குக்கிங் வினிகர் போன்றவைகளை தலா ஒரு தேக்கரண்டி எடுத்து கண்டிஷனருடன் கலந்து முடியில் பூச வேண்டும். பின்பு சுடு தண்ணீரில் டவலை முக்கிப் பிழிந்து, தலையில் கூந்தலை சுற்றிக் கட்ட வேண்டும். இரண்டு, மூன்று முறை அவிழ்த்து கட்டவேண்டும். 1520 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்போ போட்டு கழுவவேண்டும். பின்பு கண்டிஷனர் பூச வேண்டும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும்.

கூந்தலில் பிரச்சினைகள் இருந்தால் அழகு நிலைய சிகிச்சைகள் அவசியப்படும். ஸ்பா, ஸ்மூத்தனிங் போன்று தேவைப்படும் சிகிச்சைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை பெறவேண்டியிருக்கும்.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் செய்ய வேண்டியவை: நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும். அழகு நிலையத்தில் இதற்காக ''ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்'' உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.  

ஒரு வாரத்திற்கு முன்பு:

முகூர்த்தத்தன்று மணப்பெண்ணுக்கு முழுமையாக எப்படி அலங்காரம் செய்யப் படுமோ அது போன்ற அலங்காரத்தை ஒரு வாரத்திற்கு முன்பே செய்து பார்த்துவிட வேண்டும். உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துவிட்டு, அதில் ஏதாவது மாற் றங்கள் தேவையா? உடை, அணிகலன்களில் ஏதாவது மாற்றம் தேவையா? என்பதை எல்லாம் பார்த்துவிட வேண்டும். இப்போது பெரும்பாலும் மணமகனும் வந்து, மணப்பெண்ணின் முழு அலங்காரத்தை பார் வையிடுகிறார். அவருடைய விருப்பத்தையும் தெரிவிப்பார். போட்டோவும் எடுத்துக் கொள் வார். இந்த அலங்காரத்திற்கு மூன்று மணி நேரம் ஆகிவிடும்.

மூன்று நாட்களுக்கு முன்பு:

பெடிக்யூர், மெனிக்யூர் எனப்படும் கால் கை நக பராமரிப்பு, வாக்சிங், பேஷ்யல், பொடி ட்ரீட்மென்ட் மற்றும் மெகந்தி போன்ற வைகளை போட்டுக்கொள்ள வேண்டும். இவைகளை செய்த பின்பு மணப்பெண்கள் வெளியே செல்லக்கூடாது. வெயிலில் அலை வது, உடலில் மாசு படிவது, அலைச்சலை ஏற்படுத்திக்கொள்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு:

நிறைய தண்ணீர் பருகவேண்டும். நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். நிறைய பழச்சாறு பருகவேண்டும்.

திருமணத்தன்று:

முகூர்த்தத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, முழுமையான மணப்பெண் அலங் காரத்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே டிரையல் செய்து பார்த்திருந்தால் வேகமாக, சிறப்பாக மணப்பெண் அலங்காரத்தை செய்து முடித்துவிட முடியும். வரவேற்பு அலங்காரம் இப்போது மிக நவீனமாகி இருக்கிறது. சிம்பிள் அதே நேரத்தில் மொடர்ன் தோற்றத்தில் மணப் பெண்கள் ஜொலிக்க விரும்புகிறார்கள். அதற்கு தக்கபடி செய்யப்படும் மணப்பெண் அலங்காரம் அதிக வரவேற்பினை பெறுகிறது.
10 December 2009

ஹிட்லரின் பாலியல் நடவடிக்கையை சித்திரிக்கும் எயிட்ஸ் விளம்பரத்தால் சர்ச்சை



சர்வாதிகாரி ஹிட்லர் பெண் ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சித்திரிக்கும் புதிய ஜேர்மனிய எயிட்ஸ் விளம்பரம் ஒன்று, ஐரோப்பா எங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மேற்படி விளம்பரமானது ஜோசப் ஸ்டாலின், சதாம் ஹுசைன் ஆகியோர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை சித்திரிக்கும் காட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.


இந் நிலையில் இன ரீதியான வெறுப்புணர்வை பிரதிபலிக்கும் இந்த விளம்பரத்துக்கு ஐரோப்பா எங்குமுள்ள “எயிட்ஸ்’ விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

“எயிட்ஸ் என்பது ஒரு மக்கள் கொலையாளி’ என்ற தலைப்பில் ஆங்கிலம் ஜேர்மன், மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், எதிர்வரும் வாரம் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படவுள்ளது.


இந்த விளம்பரமானது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாக உள்ளதாகவும் தமக்கு எயிட்ஸ் நோய் உள்ளதா என பரிசோதிப்பதற்கு வெட்கப்பட்டு பின்வாங்கும் நிலையை மக்கள் மத்தியில் தோற்றுவிப்பதாக உள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாக கொண்டு செயற்பட்டு வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு தொண்டர் ஸ்தாபனமான “ரெரன்ஸ் ஹைக்கின் டிரஸ்ட்’ குற்றஞ்சாட்டியுள்ளது.


இது தொடர்பில் மேற்படி விளம்பரத்தை தயாரித்த டாஸ் கொமிட்டி முகவர் நிலையத்தின் ஆக்க பணிப்பாளர் டிர்க் சில்ஸ் விபரிக்கையில்,

“”இந்த விளம்பரமானது மக்களை அதிர்ச்சியடையச் செய்து “எயிட்ஸ் எச்சரிக்கை தொடர்பில் அவர்களது கவனத்தை திசை திருப்புவதை நோக்காகக் கொண்டுள்ளது ” என தெரிவித்தார்.

http://tamiljournal.com/
09 December 2009

என் நண்பரின் மனதை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்வது? பதில்கள்

"என் நண்பரின் மனதை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்வது?' என்ற வாசகியின் கடிதத்திற்கான, வாசகர்களின் பதில்கள்:

* பி.சுப்புலட்சுமி செல்வராஜ், ஞானானந்தகிரி நகர், தேவகோட்டை:
பிற ஆண்களிடம் பழகும் முறையில் கவனம் தேவை. ஒரு ஆண் உடல் அழகை வர்ணிக்கும் அளவிற்கு இந்த பெண் இடம் கொடுத்தது தவறு. ஆண், பெண் இருபாலரும் எதைப் பேச வேண்டுமோ, அதைப் பற்றித் தான் பேச வேண்டும். அதற்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். இந்தப் பெண் ஏதோ ஒரு விதத்தில் நட்பை இழக்க மனம் விரும்பவில்லை என்று சொல்வது சரியில்லை. ஏனெனில், அழகானவர் என்று சொன்னதே சரியில்லை.
பெண்கள், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள ஆண் ஏழை, பணக்காரன், அழகானவன், அன்பானவன், மனதை நெருட வைத்தவன், குடும்பப் பிரச்னைக்கு ஆறுதல் சொன்னவன் என்று தான், பிற ஆண்களிடம் மனதை தவற விடுகின்றனர். ஒரு பெண்ணின் உடல் அழகைப் பற்றி சொல்ல, பெற்றவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ நமது பண்பாட்டில் இடமில்லை. கணவருக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. இந்த பெண்ணிற்கும் அவரிடம் ஏதோ ஈடுபாடு உள்ளது. இப்பெண், அவரது நட்பை துண்டிக்க வேண்டும்.

* வத்சலா சதாசிவன், சிட்லபாக்கம், சென்னை:
உங்கள் நண்பரின் புகழுரையை வளரவிட்டால், அது நன்மையைத் தராது. மாறாக, எதிர்மறை விளைவுகளைத் தான் தரும். சிரித்து பேசுவது மட்டும் நட்பு அல்ல. தவறு செய்த இடத்து நெருங்கிச் சென்று கண்டித்துக் கூற வேண்டும். காலம் மனிதர்களை மாற்றுகிறது. எண்ண ஓட்டங்களின் திசையை திருப்புகிறது. அதனால், எப்போதோ ஓர் வார்த்தை கூறிவிட்டார் என்பதற்காக, அதன்படியே நினைப்பார்கள் என்று சொல்லமுடியாது. அதனால், விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்காமல், மனதளவில் சினேக பாவத்துடன், நான் <உங்களுடன் நட்பாகத் தான் பழகுகிறேன் என்று சொல்லுங்கள். நட்பு நீடிக்க வேண்டுமானால், முதலில் உங்கள் மனதை சரி செய்து கொண்டு, பிரச்னையை கண்டு சேர்ந்து விடாமல், முன்னுக்கு வர வேண்டும். உணர்வுகள் பெருகினால், உறவுகளும் மலர்ந்து, புதிதாக மணம் வீசும்.


* என் காமகோடி, தேனாம்பேட்டை, சென்னை:
உலகில் இருவர் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இப்படி பெண்ணின் உடல் அழகு பற்றி பேசிய நண்பரின் மனதை புண்படுத்துவதில் தவறில்லை. திருமணமான ஆண், வேறு ஒரு பெண்ணின் உடல் வனப்பு பற்றி பேசினால், அவர் நண்பரே அல்ல. உயர்ந்த மனிதர்கள், கருத்துகள் பற்றி பேசுவர்; நடுத்தர மனிதர்கள், நிகழ்ச்சிகள் பற்றி பேசுவர்; மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி பேசுவர் என்று அறிஞர்கள் கூறுவர்.
திருமணமான ஆண், வேறு ஒரு பெண்ணின் உடல் வனப்பு பற்றி அந்த பெண்ணிடமே , பேசினால் அவர் நண்பரே அல்ல. அவருடைய தொடர்பை அறுத்துக் கொள்வது தான் அந்த பெண்ணுக்கு நல்லது. பெண்கள் என்றாலே பலகீனமானவர்கள் என்ற எண்ணம், ஆண்களிடம் உள்ளது. அதனால், அந்த நண்பனை விட்டு விலகிக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

* ஆர். ரேணுகா, விராட்டிபத்து, மதுரை:
ஆண் நண்பர்கள் கிடைத்துவிட்டாலே, ஏதோ பெரிய புதையல் கிடைத்த மாதிரி சந்தோஷம் நம் பெண்களுக்கு. உண்மையும் அது தான். அருமையான நண்பர்கள் கிடைப்பது வரம்.நட்பில் ஆண், பெண் பேதம் இல்லை; என்றாலும், நடைமுறையில் நமக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொள்வது நட்பிற்கு நல்லது. நீங்கள் குறிப்பிட்ட நபர், சரியான சந்தர்ப்பவாதி தான். கிடைத்த சந்தர்ப்பத்தில் உங்கள் உடலை விமர்சித்துள்ளார். அவரை காயப்படுத்தி விடுவோமோ என்று நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், நண்பன் என்ற பெயரில் அவரை உற்சாகப் படுத்துகிறீர்கள். இது சரி; அது தவறு என்று சொல்லி திருத்த முயல்வதே நட்பின் இலக்கணம். நேரடியாக தைரியமாகவும், தெளிவாகவும், "தேவையற்ற விமர்சனங்கள் என்னை காயப்படுத்துகின்றன' என்றும், "தொடர்ந்தால், நம் நட்பு நீடிக்காது' என்பதையும், திட்டவட்டமாக கூறி விடுங்கள். ஒரு வேளை யதார்த்தமாக சொல்லியிருந்தால், அவர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாய் அமையும். தவறுவது இயல்பு; தவறு செய்பவனை மன்னிக்கலாம். ஆனால், தெரிந்தே செய்யும் தவறுகளை மன்னிக்காதீர்கள் தோழியே...

* ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை:
இது பெண்கள் பகுதி, இங்கே ஆண்களுக்கு வேலை இல்லை; முழுக்க முழுக்க பெண்கள் தான் ஆலோசனை கூற வேண்டும். ஆனால், அந்த பெண் கேட்ட கேள்வி அபத்தமானது; ஆபத்தானதும் கூட. அதனால் தான் ஆணாகிய நான் ஆலோசனை கூற இந்த கடிதத்தை எழுதுகிறேன். முதலில் நட்பு என்றால் என்ன என்பதை அந்த பெண் புரிந்து கொள்ள வேண்டும். திருவள்ளுவர் நட்பை பற்றி, நட்பு-நட்பு ஆராய்தல்-பழைமை-தீ நட்பு-கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில், ஐம்பது குறட்பாக்களை கூறியுள்ளார். இவர் அந்த ஆணிடம் கொண்டுள்ளது நட்பல்ல; கூடா நட்பு. ஒரு பெண்ணை பாதாதி கேசமாக வர்ணனை செய்ய ஒரே ஒருவருக்கு தான் உரிமை உண்டு. அது, அவளது கணவனாகத் தான் இருக்க வேண்டும். அதைத் தான் எந்த பெண்ணும் விரும்புவார். ஒரு சிறு உதாரணம் தர விரும்புகிறேன். சம்பந்தப்பட்ட ஆண் திருமணமானவர்; அவருக்கு ஒரு நண்பர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர், இவர் மனைவியைப் பார்த்து அங்கம் அங்கமாக வர்ணிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்த இவர், "ஆகா, என் மனைவியைப் பற்றி மிக அழகாக வர்ணிக்கிறாய். உன்னை நண்பனாகப் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நம் நட்பு வளர்பிறை சந்திரனைப் போல தொடரட்டும்' என்று கூறுவாரா அல்லது அவரை அடித்து துரத்துவாரா? அந்த பெண் கேட்ட கேள்விக்கு பதில் இதிலேயே அடங்கியுள்ளது. ஒரு ஆண் தன் உடல் அழகை வர்ணிப்பதை, எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள் (கட்டிய கணவனைத் தவிர). அந்த ஆணின் நட்பை உடனடியாக துண்டித்துக் கொள்வது தான் நல்லது. அதையும் மீறி அவருடன் நட்பு தொடருமானால், அவர் வாழ்க்கையில் எதிர்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

www.dinamalar.com
24 November 2009

என் நண்பரின் மனதை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்வது?


ஆண், பெண் நட்பு பற்றி பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஆண்களுடனும் நல்ல முறையில் நட்பை தொடர முடியும் என்று ஒரு சாரார் கூறி வந்தாலும், அது நமது கலாசாரத்திற்கு ஒத்து வராது என்பதே பெரும்பாலானாவர்களின் கருத்தாக உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஆண்கள் நல்லவர்கள் தான் என்றும் கூறப்படுவதுண்டு. கீழே, வாசகி ஒருவரின் கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது. கடிதத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆண், சந்தர்ப்பவாதியா? யதார்த்தவாதியா?

இதோ கடிதம்...

என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அந்த இளைஞர் திருமணமானவர். மிகவும் அழகானவர்; திறமைசாலி. நன்கு சிந்திக்கக் கூடியவர். நானும் ஓரளவுக்கு புத்தகங்களைப் படிக்கக் கூடியவள் என்பதால், அவர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் அடிக்கடி பேசி பழக்கமில்லை. மற்றவர்களிடம் பேசுவதை வைத்து கணித்திருக்கிறேன். இந்நிலையில், ஒரு முறை அவரிடம் பேசும் போது, என் உடலை பற்றி வர்ணிக்கத் துவங்கிவிட்டார். "உன் உடல் கட்டமைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். உன் இடுப்பு குறுகி உள்ளது ; உன் முன்புறத்தை விட, பின்புறம் எனக்கு மிகவும் பிடிக்கும்' என, மேலும் சிலவற்றை கூறினார். உண்மையில், என் உடலை பற்றி அவர் இப்படி பேசியதை நான் ரசிக்கவும் இல்லை; விரும்பவும் இல்லை என்பதை மறைமுகமாக அவருக்கு உணர்த்தினேன். ஆனால், அவரது பேச்சை நிறுத்த முடியவில்லை.


காரணம், அவருடனான நட்பை இழக்க நான் விரும்பவில்லை. அவரது மனம் புண்படும்படி பேசவும் மனமில்லை. வேறு யாராவது இப்படிக் கூறியிருந்தால், முதல் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னரே அதற்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பேன். ஆனால், இவரிடம் அப்படி நடக்க என்னால் இயலவில்லை. இதுபோன்று அவர் பேச , ஒரு வேளை நான் கூட மறைமுகமாக காரணமாக இருந்திருக்கலாம். காரணம், ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழைய முடியாது. எனவே, அவரது மனதை புண்படுத்தாமல், அவரது நட்பையும் இழக்காமல் அவரிடம் இதுபோன்ற பேச்சுகளிலிருந்து தப்பிக்க வழி கூறுங்கள்.

- இப்படி எழுதியுள்ளார் வாசகி.

உடன் பணியாற்றும் பெண்களின் உடல் அழகை வர்ணிப்பதை ஏற்றுக் கொள்ளலாமா? இந்த தோழி போன்று, நீங்களும் இதுபோன்ற பிரச்னைகளில் விழுந்தவரா? அந்த பிரச்னையை நீங்கள் எப்படி, "ஹேண்டில்' செய்தீர்கள்? இந்த தோழி அந்த நபருடனான நட்பை இழக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கு வழி என்ன? இவருக்கு வழிகாட்ட விருப்பமா? எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் எங்களுக்கு! உங்கள் வழிகாட்டுதல் பல தோழிகளுக்கு உதவுமே!

www.dinamalar.com

வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வருகிறதா?


வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வரும் அபாயம்........

வளர்ந்து வரும் விஞ்ஞானம், உலகமயமாக்கல், நவீன தொலைதொடர்பு உலகத்தை சுருக்கிவிட்டது. நம்ம சுப்பனுக்கும் குப்பனுக்கும் உள்ள பிரச்சனை வெள்ளை மாளிகை வரை தெரிந்துவிடுகின்றது.

நாங்கள் நால்வர் ஒருநாள் பீர் குடிக்கலாம் என்று பேசிகொண்டோம். அதில் ஒருவர் நான் வரவில்லை என்றார். அவரிடம் நான் காமடிக்காக ஒரு கதைச் சொன்னேன்....... அதாங்க எல்லோருக்கும் தெரிந்த மீன் கதை, நண்பர்கள் இருவர் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு குட்டையில் மீன் அதிகமாக இருந்தது. இருவருக்கும் ஒரே குழப்பம் மீன் பிடிக்கலாமா? கோயிலுக்கு போகலாமா? ஒருவன் மீன் பிடிப்பதாக முடிவெடுத்தான். மற்றொருவன் இல்லை நான் சாமி கும்பிட போரேன் என்று சென்றுவிட்டான். ஆனால் இருவரின் மனதில் எண்ண ஓட்டங்கள், மீன் பிடிப்பவன் மனதில் கடவுளின் எண்ணமே அதிகம் இருந்தது. இதில் சாமி கும்பிட போனவன் மனம் முழுவதும் மீன் பிடிப்பதிலேயே இருந்தது.

மேற்கண்ட கதையில் மனதூய்மையை அடிகோல் காட்டுகின்றது. எந்த ஒரு செயல்பாட்டிற்கும் மன ஈடுபாடும் தூய்மையும் முக்கியம். அதேபோல தொழிலிலும் நேர்மை என்பது மிக முக்கியமானது. நேர்மையற்ற முறையினால் பணம் வருவதுபோல தெரிந்தாலும் முடிவில் அந்த தொழிலே நசுங்கும்..

ஆதிமனிதனின் முதல் தொழில் விபச்சாரம் என்று சொல்லப்படுகின்றது. விபச்சாரம் என்பது எனனை பொருத்தவரை ஆண்களால் பெண்களுக்கு அழிக்கபடும் அநீதி என்று சொல்வதிற்கில்லை. இது சமுகத்தால் அழிக்கப்படுகின்றதாகவே நான் கருதுகின்றேன். காசுக்காக தான் பெண்கள் விபச்சாரம் செய்வதும், மற்றும் ஈடுபடுத்த படுவதும். இது ஆண்களால் முடியும் என்றால் கண்டிப்பாக ஆண் விபச்சாரமும் சமுகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். ஆண் விபச்சாரம் பற்றிய என் முந்தய பதிவு ஆண் விபச்சாரம்,........ வடிகாலுக்காக இளஞன் விபச்சாரியை தேடி வருகின்றான். பணமும் கொடுக்கப்படுகின்றது அந்த பெண் தன்னை முழுமையாக அவனுக்கு அழிக்கவில்லை என்றால் அங்கே நடப்பது ஏமாற்றம். இதை கலாச்சாரம் என்ற போர்வையில் ஞாயப்படுத்த வேண்டாம். விபச்சாரம் சரியா? தாவறா? என்று கூற வரவில்லை ( இதை சமுகம் பதில் சொல்லட்டும்) நேர்மையின்மையை கூறுகின்றேன்.

மேற்சொன்ன எடுத்துக்காட்டு விரசமாக இருந்தாலும், தொழிலில் நேர்மையின்மை பாதிப்பு உணர்வு பூர்வமாக இருக்கும் என்று நம்புகின்றேன். தமிழர்களிடம் விபச்சாரம் என்பது மிக மிக குறைவு கலாச்சாரம் என்ற போர்வையில் நடக்கும் நேர்மையின்மையும் ஒரு காரணம். இந்த தொழில் நசியுற்றால் சமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை விட்டுவிடலாம்.

ஆனால் இன்று தமிழர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வைகை தொழிகளிலும் நேர்மை குறைந்து வருவது அபாயத்தை கொடுக்கின்றது. மலேசியா, சிங்கபூர் நாடுகளில் பொதுவாக தமிழர்கள்தான் வேலைக்கு வருவார்கள். தற்போது தவிற்க படுகின்றது எனபது வெளிப்படையாக தெரிகின்றது. இதற்கு தொழில் நேர்மையின்மை மற்றும் குற்றம் செயல்கள் முக்கிய காரணம். முன்பெல்லாம் தொலை தொடர்பு துறையில் தமிழர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது ஆந்திரா மற்றும் வடஇந்தியர்கள் அதிகம் காணமுடிகின்றது. இதற்கு தமிழர்கள் ஞானம் குறைந்துவிட்டது என்பதில்லை, நேர்மையின்மைதான் காரணம்.


வெளிநாட்டில் மட்டும் இல்லை, உள்நாட்டு வேலைகளிலும் நேர்மையின்மை காணமுடிகின்றது. இதை தொழிலதிபர்கள் வெளிப்படையாகவே சொல்கின்றனர். தொழிலதிபர் தமிழராக இருந்தாலும் தமிழனை வேலைக்கு அமர்த்துவதில்லை காரணம் குறைந்து வரும் நேர்மை. தமிழகத்தில் நடக்கும் கட்டிட வேலை, சாலைப்பணிகளில் வடமாநிலங்களிலிருந்து ஒப்பந்த பேரில் ஆள் எடுத்து வேலை செய்கின்றனர். தமிழ் நாட்டில் ஆள் இல்லையா? இல்லை எல்லோரும் தன்நிறைவு பெற்றுவிட்டனறா? பிச்சை எடுக்கும் சோம்பேரிகள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கின்றது. வெளிப்படையாக தெரியும் இந்த தொழில் நேர்மையின்மையை உடன் கழையவில்லை என்றால் தமிழருக்கு உலகில் இடமில்லாமல் போகலாம்....

எந்த தொழிளாகட்டும் நேர்மையும் தூய்மையும் இல்லை என்றால் காலபோக்கில் நசுங்கும். நவின உலகில் எல்லோரும் எல்லா வேலையும் செய்ய நேரமில்லை அதற்காக புரோக்கர்கள் தேவையாகின்றது. தற்போது தமிழகத்தில் நடந்துவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் நேர்மை எந்த அளவிற்க்கு இருக்கின்றது என்பதும் பல வழக்குகளில் தெரிய வருகின்றது. ஒரே இடத்தை பலருக்கு விற்று பணம் பார்த்தும் இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலெ சொன்ன விரசமான எடுத்துக்காட்டு பொருத்தமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் மிக மோசமான நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டு வருகின்றது. இதற்க்கு வேலைக்கு ஆல் இல்லாதது மேலும் வேலையில் ஈடுபாடு இல்லாமை, நெர்மையின்மையும் காரணங்கள்.. பணம் ஒன்றெ குறிக்கோலாக இல்லாமல் நேர்மையுடன் செய்தால்தான் நாம் நினைக்கும் எதிர்கால இந்தியாவை காணமுடியும் என்பது உண்மை..........

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்
ஆ.ஞானசேகரன்
08 November 2009

ஆ‌ண்மை‌த் த‌ன்மை - ஆய்வுகளும் முடிவுகளும் 2


நம்மூரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணிக்கு, ஆண்மையை அதிகரிப்பதில் வயாகராவை விஞ்சும் சக்தி உள்ளதாக ஆய் வில் கண்டறியப்பட்டுள்ளது.

முதலிரவன்றே பிரிந்த புதுமணத் தம்பதிகள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இதுபோல் திருமணமான புதிதிலேயே பல்வேறு தம்பதிகள் பிரிந்து செல் கிறார்கள். இதற்கு பின்னணியில் ஆண்மை குறைபாடே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப நீதிமன்றங்களில் வரும் விவாகரத்து வழக்குகளில் இந்த பிரச்சினைக்காகத்தான் அதிக பெண்கள் வருகிறார்களாம். இப்போதெல்லாம் இளம் வயது ஆண்கள் கூட ஆண்மை குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.

பிறப்பிலேயே ஆண்மையின்மை ஏற்பட்டு கவனிக்காமல் இருந்திருந்தால் அதனை மாற்ற முடியாது. ஆனால், மனம் மற்றும் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால் சிலர் தற்காலிகமாக ஆண்மைத்தன்மையை இழக்கிறார்கள். இதில், உடல்ரீதியாக பிரச்சினை ஏற்படுவோருக்கும், மற்ற ஆண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியை அமெரிக்க டாக்டர் கள் கண்டுபிடித்துள்ளார்கள். சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத் துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந் திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற் கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந் துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொறுத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக் கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தர்பூசணிக்கு என்ன சிறப்பு?

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள் ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தக வலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளி யிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு ஆசையை' அதி கரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத் தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அது போல் உள்ள சிட்ரூ லின்' என்ற சத்து பொருள், வயாகராவை போல் இரத்த நாளங் களை விரிவடைய செய்து, இரத்த ஓட் டத்தை அதிகரிக்கு மாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்ப டும் இரசாயன மாற்றம் காரணமாகசிட்ரூலின்', அர்ஜினைனாக' எனும் இரசாயனப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்கு விக்கிறது. வெள்ளை பகுதியில்தான் இந்த சிட்ரூலின் அர்ஜினைன் இரசாயன மாற்றமானது, சர்க் கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளி களுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதி யில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப் பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடு வதைப்போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.
03 November 2009

ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.


இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.

இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

ஆ‌ண்மை‌த் த‌ன்மை - ஆய்வுகளும் முடிவுகளும்


"ஆண்மை பெண்மை,
இவ்விருமைகளின்
கற்பனைக் கனவுகளின்,
சில நிமிட,
மரபு சார்ந்த,
புதுக் கவிதையின்
கண்ணீர்த் துளி நீ...
உயிர்த் துளி!!!"


இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.
மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது என்பது இவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவாகும்.

தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. தம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் காலார நடந்து வருவது தான் !

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.


இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச் சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை செழிக்கும்

ஆபாச "சிடி' பார்க்கும் பெண்கள் - அதிர்ச்சி தகவல்

ஆபாச "சிடி' பார்க்கும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மளிகைக் கடை, பாத்திரக்கடை, பால் கடையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபாச, புதுப்பட "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட "சிடி'க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட "சிடி'க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு "பெண்கள் மட்டும் நடித்திருக்கும்' ஆபாச "சிடி'க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச "சிடி'க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர்.

பெண்களிடம் ஆபாச "சிடி' மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் "சிடி'யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட "சிடி' கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச "சிடி'க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச "சிடி'க்களை வாங்கிச் சென்றனர்.

இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் "சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்தார்.

பிராட்வே பகுதியில் "சிடி' விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "சிடி'க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.


மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு "சிடி' வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற "சிடி'யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த "சிடி'யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த "சிடி'யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச "சிடி' என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.
30 September 2009

செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்!

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் உரிய நேரத்தில் போதிய அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டிகளின்போது உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும், முழுத் திறமையுடனும் விளையாட முடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் மன நல நிபுணர் பேடி அப்டன் ஆகியோர் இணைந்து நான்கு பக்கங்களில் இதுகுறித்து விளக்கி இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளனராம்.

அதில், செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், டெஸ்டோஸ்டிரான் அளவு கூடும். இதனால் உடலுக்கும், மனதுக்கும் புதுத் தெம்பு கிடைக்கும், ஆவேசம் வரும். போட்டிகளில் முழுத் திறமையை வெளிப்படுத்த உதவும். அதற்கு மாறாக சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் இவை அனைத்தும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில், செக்ஸ் தவிர சரியான முறையில் சாப்பிடுவது, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பலவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கு சென்றுள்ளது.

இந்திய அணியினர் செக்ஸ் குறித்து தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என்றும் கிர்ஸ்டனும், அப்டனும் அட்வைஸ் செய்துள்ளனராம். மேலும் செக்ஸ் குறித்த தவறான நம்பிக்கைகளைக் களையவும் அவர்கள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

செக்ஸ் தவிர உணவுப் பழக்க வழக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி, உடற்பயிற்சி வழக்கங்கள், சர்க்கரை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி, என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாம்.

இவை தவிர மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

நான்காவது அம்சமாக, வெளிநாடுகளுக்குப் போய் விளையாடும்போதுஇந்தியா அதிக அளவில் தோல்வியுறுவது ஏன் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இதை விளக்க இந்தியாவின் வரலாறு மற்றும் இந்தியா புரிந்த போர்கள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனராம்.

இந்த அறிக்கை இந்திய வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது, புத்துணர்ச்சியுடன் அவர்கள் ஆடுவார்களா என்பதை சாம்பியன்ஸ் டிராபியின் முடிவில்தான் தெரிந்து கொள்ள முடியும்.

Uncategory

m

Healths

,

Downloads

m

Product Cloud

Labels

Enter your email address:



Followers